அ.தி.மு.க – பாரதிய ஜனதா கூட்டணியை 2004 நாடாளுமன்ற தேர்தலில் ஆதரித்தார் ரஜினி, அப்போது பிரதமர் பதவிக்கு போட்டியிட்ட வாஜ்பாயையும் சந்தித்துள்ளார்.
இந்நிலையில் பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ரஜினியை சந்திக்க இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை கூட்டியுள்ளது.
ஆனால் பா.ஜ வில் இருந்த பல பேர் ரஜினி ஆதரவுக்காக அணுகியும் அவர் வாயை திறக்காதிருக்கும் இந்த நேரத்தில் மோடியை சந்திப்பது அக்கட்சி வட்டாரத்திற்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
தன் மகள் எடுக்கும் கோச்சடையான் திரைப்படத்தில் மிக அதிக கவனம் செலுத்தி வரும் ரஜினி பல வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் ஜெயா டிவி க்கு பேட்டி அளித்துள்ளார். அப்பேட்டி தமிழ் வருட பிறப்பிற்கும் ஒளிபரப்ப இருக்கின்றனர்.
இந்நிலையில் கண்டிப்பாக ரஜினி பா.ஜ விற்கு நேரடியாக ஆதரவு அளிக்க மாட்டார் என சுற்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரஜினி ஆதரவு அளிக்காவிட்டாலும் தற்போது மோடியை சந்திப்பதே பல வாக்குகளை சேகரித்தது போல் என கருதி வருகிறார்களாம் கட்சி வட்டாரத்தினர்.
இச்சந்திப்பால் போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டில் பலத்த பாதுகாப்பு நிலவி வருகிறது.
0 comments:
Post a Comment