கற்பவை கற்றபின் படத்துக்காக தீக்குளிக்கும் காட்சி படமாக்க எதிர்ப்பு கிளம்பியதால் பதற்றம் ஏற்பட்டது. இது பற்றி இயக்குனர் பட்டுராம் செந்தில் கூறும்போது,ஒரு விஷயத்துக்காக தற்கொலை செய்வதைவிட உயிரோடு இருந்து சாதிப்பதுதான் முக்கியம் என்பதை உணர்த்தும் கதையாக உருவாகிறது இப்படம்.
முக்கிய பிரச்னைக்காக இளைஞன் தீக்குளிக்கும் காட்சியை வளசரவாக்கத்தில் படமாக்க எண்ணினே£ம். ஜனநெரிசல் மிக்க இடத்தில் இதற்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
கையில் பெட்ரோலும், தீப்பெட்டியுமாக வந்த ஹீரோ மது உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொள்வதை கண்டவர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். ஷூட்டிங் நடக்கிறது என்று சொல்லியும் கேட்கவில்லை.
எதுவாக இருந்தாலும் பொது இடத்தில் தீ குளிக்கும் காட்சியை படமாக்கக்கூடாது என்றனர். இதையடுத்து பெட்ரோல் ஊற்றிக்கொள்ளும் காட்சி மட்டும் படமாக்கிவிட்டு தீ எரிவதை கிராபிக்ஸ் செய்தோம்.
இப்படத்தில் அபிநிதா, சிங்கம் புலி, வாசு விக்ரம் ஆகியோரும் நடிக்கின்றனர்.
கே.வி.கணேஷ் ஒளிப்பதிவு. ஏ.டி.இந்திரவர்மன் இசை. கார்த்திகேயன், எஸ்.ரமேஷ், செந்தில் தயாரிப்பு என்றார்.
0 comments:
Post a Comment